
இந்திய கிரிக்கெட் அணி, தற்போது ‘கேப்டன்ஸி சர்ச்சையில்’ சிக்கித் தள்ளாடி வருகிறது. ஒருநாள் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி, எந்த வித முன் அறிவிப்புமின்றி நீக்கப்பட்டது தான் சர்ச்சைகளை ஆரம்பித்து வைத்தன. அவருக்கு பதிலாக இனி டி20 மற்றும் ஒருநாள் ஃபார்மட்டுகளுக்கு ரோஹித் சர்மா, கேப்டனாக செயல்பட உள்ளார்.
புதிதாக கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ள ரோஹித் சர்மா பிசிசிஐ டிவி-க்காக கொடுத்த பேட்டியை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அதில் பேசிய ரோஹித், “இந்திய கிரிக்கெட் அணி விளையாடப் போகிறோம் என்றாலே அதற்கு உண்டான அழுத்தம் நிச்சயம் அதிகமாக இருக்கும். அதிகப்படியான நபர்கள் இது குறித்துப் பேசிக் கொண்டேதான் இருப்பார்கள். நேர்மறையாகவும் பேசுவார்கள் அல்லது எதிர்மறையாகவும் பேசுவார்கள். என்னைப் பொறுத்த வரையில் ஒரு கிரிக்கெட் வீரராக எனது வேளையில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என விரும்புகிறேன்.