Advertisement

யுஎஸ் மாஸ்டர்ஸ் டி10: கலிஃபோர்னியா நைட்ஸை வீழ்த்தி நியூஜெர்ஸி லெஜண்ட்ஸ் அசத்தல் வெற்றி!

கலிஃபோர்னியா நைட்ஸுக்கு எதிரான டி10 லீக் ஆட்டத்தில் நியூஜெர்ஸி லெஜண்ட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Bharathi Kannan
By Bharathi Kannan August 21, 2023 • 23:48 PM
யுஎஸ் மாஸ்டர்ஸ் டி10: கலிஃபோர்னியா நைட்ஸை வீழ்த்தி நியூஜெர்ஸி லெஜண்ட்ஸ் அசத்தல் வெற்றி!
யுஎஸ் மாஸ்டர்ஸ் டி10: கலிஃபோர்னியா நைட்ஸை வீழ்த்தி நியூஜெர்ஸி லெஜண்ட்ஸ் அசத்தல் வெற்றி! (Image Source: Google)
Advertisement

கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்களைக் கொண்டு யூ எஸ் மாஸ்டர் லீ கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஆறு அணிகள் கலந்து கொள்ளும் இந்த போட்டி தொடரானது கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவில் தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற போட்டியில் நியூஜெர்ஸி லெஜண்ட்ஸ் - கலிஃபோர்னியா நைட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற  நியூஜெர்ஸி அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய கலிஃபோர்னியா அணியில் ஜேக்ஸ் காலிஸ் 7 ரன்களிலும், மிலிந்த் குமார் 27 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இருப்பினும் அணியின் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் ஒரு பக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அரைசதம் கடந்தும் அசத்தினார். இதில் 31 பந்துகளை எதிர்கொண்ட அவர் 3 பவுண்டரி, 8 சிக்சர்கள் என 75 ரன்களைச் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Trending


இதன்மூலம் 10 ஓவர்கள் முடிவில் கலிஃபோர்னியா நைட்ஸ் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 116 ரன்களைக் குவித்தது. நியூஜெர்ஸி லெஜண்ட்ஸ் தரப்பில் டிரேகோ, பார்ன்வெல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றி அசத்தினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய நியூஜெர்ஸி அணிக்கு ஜெஸ்ஸி ரைடர் - நமன் ஓஜா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். பின் ஜெஸ்ஸி ரைடர் 20 ரன்களுக்கும், நமன் ஓஜா 25 ரன்களுக்கும், அல்பி மோர்கல் 8 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.

அதன்பின் களமிறங்கிய யுசுப் பதான் அதிரடியாக விளையாடிய 2 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 35  ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அதன்பின் வந்த கிறிஸ்டோபர் பார்ன்வெல் - பீட்டர் டிரெகோ இணை அணிக்கு தேவையான ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் நியூஜெர்ஸி லெஜண்ட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் கலிஃபோர்னியா நைட்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement