
Cricket Image for சச்சினை தொடர்ந்து மேலும் ஒரு வீரருக்கு கரோனா! (Yusuf Pathan (Image Source: Google))
இந்தியாவில் சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்பட பலர் கரோனாவால்
பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கரோனா
தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்
வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது, “இன்று மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில்,
எனக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. எங்கள் குடும்பத்தில் மற்ற யாருக்கும் கரோனா
தொற்று இல்லை. இப்போது மருத்துவர்களின் ஆலோசனைகளை பின்பற்றி நான் என்னை
தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன்"என்று கூறியுள்ளார்.