
Yuvraj Singh and Hazel Keech are blessed with a baby boy (Image Source: Google)
இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மற்றும் நடிகை ஹேசல் கீச் ஆகியோருக்கு 2016ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யுவராஜ் சிங் பதிவிட்டுள்ளதாவது, “கடவுள் எங்களுக்கு ஒரு ஆண் குழந்தையை ஆசிர்வதித்திருக்கிறார். இந்த நற்செய்தியை எங்கள் ரசிகர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.
கடவுளுக்கு நன்றி கூறுகிறோம். இந்த குழந்தையை வரவேற்கும் அதேவேளையில் எங்கள் தனியுரிமையையும் மதிக்க விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.