Advertisement

பாட் கம்மின்ஸ் பிளேயிங் லெவனில் இருந்திருக்க வேண்டும் - யுவராஜ் சிங்!

கொல்கத்தா அணியில் ஆல் ரவுண்டர் பாட் கம்மின்ஸ் இடம்பெறாதது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan April 29, 2022 • 13:56 PM
Yuvraj Singh Questions Kolkata Knight Riders For Dropping “Match-Winner” Pat Cummins
Yuvraj Singh Questions Kolkata Knight Riders For Dropping “Match-Winner” Pat Cummins (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 41ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதின. இதில் டெல்லி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா அணி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் நிதிஷ் ரானா மட்டுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

பந்து வீச்சில் 4 பவுலர்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். 5ஆவது பந்துவீச்சாளராக ரஸ்ஸல் இருந்தார். இந்த போட்டியில் டிம் சவுத்தி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இவருக்கு பதிலாக பாட் கம்மின்ஸ் அணியில் இருந்திருந்தால் போட்டியின் முடிவு மாறியிருக்கும் என ரசிகர்களின் கருத்தாக இருந்தது.

Trending


இந்நிலையில் கொல்கத்தா அணியில் ஆல் ரவுண்டர் பாட் கம்மின்ஸ் இடம் பெறாதது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

அதுகுறித்து பேசிய அவர், “ஆஸ்திரேலியா அணியின் ஆல் ரவுண்டர் கொல்கத்தா அணியில் இடம் பெறாதது ஆச்சரியமாக உள்ளது. 2 போட்டிகளில் சரியாக விளையாடாததால் அணியில் சேர்க்காதது சரியான முடிவு இல்லை. அவர் இடம் பெற்றிருந்தால் கொல்கத்தா அணி 2 அல்லது 3 வெற்றிகளை பெற்றிருக்க முடியும். இது என்னோட தனிப்பட்ட கருத்து” என்று தெரிவித்தார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement