
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின. இந்த போட்டி சிட்னியில் உள்ள மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியில் முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவருமே சொதப்பியதால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 133 ரன்களை மட்டுமே குவித்தது.
இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் ரோஹித், கேஎல் ராகுல், விராட் கோலி, தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக் அடுத்தடுத்து விக்கெட்டாகி ஏமாற்றினார். தனி ஆளாக போராடிய சூர்யகுமார் யாதவ் 40 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 68 ரன்களை விளாசினார். இவரின் இந்த அதிரடி ஆட்டம் இந்தியாவை 133 ரன்கள் வரை கொண்டு சென்றது.
அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர் ஆகியோரின் அதிரடியான அரைசத்தின் மூலம், 19.4 ஓவர்கள் முடிவில் இலக்கை எட்டி, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.