
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல். இவர் இதுவரை 72 ஒருநாள் மற்றும் 80 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் 27.13 சராசரியில் 121 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இது தவிர, சாஹல் சர்வதேச டி20 போட்டிகளில் 25.09 சராசரியில் 96 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்நிலையில் தான், 2023 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியில் யுஸ்வேந்திர சாஹலுக்கு இடம் கிடைக்கவில்லை. இந்த செய்தியானது வெளியானபோது இந்திய ரசிகர்களும், பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் சாஹல் ஏன் அணியில் தேர்வு செய்யவில்லை கேள்வி எழுப்பி வந்தனர். இந்தநிலையில், சாஹல் தற்போது கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட முடிவு செய்துள்ளார் என்ற செய்தி வெளிவந்துள்ளது.
இதன்மூலம்,யுஸ்வேந்திர சாஹல் இங்கிலாந்தின் கவுண்டி அணிகளில் ஒன்றான கென்ட் அணிக்காக விளையாடலாம் என்றும், இது கவுண்டி கிரிக்கெட்டில் சாஹலின் அறிமுகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. கடந்த நேற்று உலகக் கோப்பைக்கான இந்திய அணி தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா முன்னிலையில் அறிவிக்கப்பட்டது.