Advertisement

முதல் ஓவரிலேயே விண்டீஸ் டாப் ஆர்டரை காலி செய்த சஹால் - வைரல் காணொளி!

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய வீரர் யுஸ்வேதிர சஹால் தனது முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
முதல் ஓவரிலேயே விண்டீஸ் டாப் ஆர்டரை காலி செய்த சஹால் - வைரல் காணொளி!
முதல் ஓவரிலேயே விண்டீஸ் டாப் ஆர்டரை காலி செய்த சஹால் - வைரல் காணொளி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Aug 03, 2023 • 09:27 PM

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றி அசத்தியுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
August 03, 2023 • 09:27 PM

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று தொடங்குகிறது. டிரினிடாட்டிலுள்ள பிரையன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. 

Trending

இன்றைய போட்டிகான இந்திய அணியில் அறிமுக வீரர்களாக திலக் வர்மா மற்றும் முகேஷ் குமார் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சனுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிராண்டன் கிங் - கைல் மேயர்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கைல் மேயர்ஸ் ரன்களைச் சேர்க்க தடுமாற மறுபக்கம் பிராண்டன் கிங் பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார்.

 

பின் இன்னிங்ஸின் ஐந்தாவது ஓவரை வீச வந்த யுஸ்வேந்திர சஹால் தனது முதல் பந்திலேயே கைல் மேயர்ஸை வெளியேற்றி அசத்தினார். அதன்பின் தனது 3ஆவது பந்தில் அதிரடியாக விளையாடி வந்த பிராண்டன் கிங்கையும் 28 ரன்களில் வெளியேற்றி அசத்தினார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 30 ரன்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. 

அதேசமயம் தனது முதல் ஓவரிலேயே யுஸ்வேந்திர சஹால் தொடக்க வீரர்கள் இருவரது விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார். இந்நிலையில் யுஸ்வேந்திர சஹால் விக்கெட் வீழ்த்திய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement