
ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று ஹம்பன்தோட்டாவில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணியில் பதும் நிஷங்கா - கருணரத்னே இணை களமிறங்கினர். இதில் கருணரத்னே 4 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த குசால் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ் 12 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் பதும் நிஷங்காவும் 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த சரித் அசலங்கா - தனஞ்செய டி சில்வா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்தனர். பின் 51 ரன்களில் டி சில்வா ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சரித் அசலங்காவும் 91 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.