அஸ்வின் புறக்கணிக்கப்படுவது சரியா? - ஜாகீர் கான் பதில்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் எடுக்கப்படாதது குறித்து முன்னால் வீரர் ஜாகீர் கான் கருத்து தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் அஷ்வின் அணியில் எடுக்கப்படவில்லை. அதுவே கடும் விமர்சனத்துக்குள்ளானது. எல்லா கண்டிஷனிலும் சிறப்பாக பந்துவீசக்கூடிய ரவிச்சந்திரன் அஸ்வினை, கண்டிஷனை கருத்தில்கொள்ளாமல் அனைத்து டெஸ்ட் போட்டியிலும் ஆடவைக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர்.
ஆனால் லண்டன் லார்ட்ஸில் நடந்த 2வது டெஸ்ட்டில் கண்டிஷன் மேகமூட்டமாக இருந்ததால் ஸ்பின்னிற்கு ஒத்துழைப்பு இருக்காது என்பதால் அஷ்வின் எடுக்கப்படவில்லை.
Trending
3வது டெஸ்ட் நடக்கும் லீட்ஸ் ஆடுகளமும் கண்டிஷனும் ஸ்பின்னிற்கு சாதகமாக இருக்கும் என்பதால், அஸ்வினை கண்டிப்பாக எடுக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து கூறினர். இங்கிலாந்தை சேர்ந்த முன்னாள் வீரர்களே அதைத்தான் தெரிவித்தனர்.
ஆனால் 3வது டெஸ்ட்டிலும் அஸ்வினை எடுக்கவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து, ரசிகர் ஒருவர் இதுகுறித்து எழுப்பிய கேள்விக்கு முன்னாள் வீரர் ஜாகீர் கான் பதிலளித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணி கண்டிஷனை காரணம் காட்டி எப்போதாவது ஸ்பின்னர் ஷேன் வார்னை அணியிலிருந்து ஒதுக்கியிருக்கிறதா? மேட்ச் வின்னர்களை கண்டிஷனை காரணம் காட்டி ஒதுக்குவது சரியானதா? என்று அந்த ரசிகர் கேள்வி எழுப்பினார்.
Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!
இதற்கு பதிலளித்துள்ள ஜாகீர் கான், “மேட்ச் வின்னர்கள் எப்போதுமே மேட்ச் வின்னர்கள் தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஷேன் வார்னை பொறுத்தமட்டில் அவர் ஒருவர் தான் ஆஸ்திரேலிய அணியின் ஸ்பின்னர். அதுவும் அவர் மிகப்பெரிய வீரர். ஆனால் இந்திய அணியை பொறுத்தமட்டில் ஏற்கனவே ஜடேஜா ஸ்பின்னராக ஆடுகிறார். எனவே கண்டிஷனை கருத்தில்கொண்டு ஆடும் லெவனை தேர்வு செய்ய வேண்டியது அவசியம். இந்திய அணியில் ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் இல்லாதது அணியை பாதிக்கிறது” என தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now