
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 396 ரன்களைக் குவித்த நிலையில், இங்கிலாந்து அணி முதால் இன்னிங்ஸில் 253 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 143 ரன்கள் முன்னிலைப்பெற்றது.
இதனைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி ஷுப்மன் கில்லின் சதத்தின் மூலமாக 255 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 399 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினாலும், அதன்பின் மளமளவென விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் அந்த அணி தற்போது வரை 7 விக்கெட்டுகளை இழந்து 270 ரன்களை எடுத்துள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஸாக் கிரௌலி ஆட்டமிழந்த விதம் தற்போது பெரும் சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது. ஏனெனில் இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 8 பவுண்டரி, ஒரு சிக்சர் என 73 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.