ஷாகா அஷ்ரஃப் ஏதோ கிளப் அணியின் தலைவர் அல்ல - ஷாஹித் அஃப்ரிடி காட்டம்!
பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் சங்கத் தலைவர் ஷாகா அஷ்ரப்பிற்கு முன்னாள் கேப்டன் ஷாஹித் அஃப்ரிடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடியுள்ள 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என்று 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணி அடுத்து விளையாட உள்ள 2 போட்டிகளில் வெற்றிபெறுவதோடு, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளின் தோல்வியும் அந்த அணிக்கு முக்கியமானதாக உள்ளது. இதனால் அரையிறுதி சுற்றில் 4வது இடத்திற்கு ரேஸ் சூடுபிடித்துள்ளது. இதனால் உலகக்கோப்பை தொடர் கூடுதல் விறுவிறுப்பு அடைந்துள்ளது.
நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வங்கதேச அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது. வங்கதேச அணி நிர்ணயித்த 206 ரன்கள் இலக்கை 32.3 ஓவர்களில் எட்டி பாகிஸ்தான் அணி அசத்தியது. இந்த ஆட்டம் தொடர்பாக பாகிஸ்தான் தொலைக்காட்சியில் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்ற விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், ஷாகின் அஃப்ரிடியின் மாமனாருமான ஷாகித் அப்ரிடி கலந்துகொண்டார்.
Trending
அப்போது பாகிஸ்தான் அணியின் முந்தைய தோல்விகள் குறித்தும் பேசப்பட்டது. அப்போது முன்னாள் வீரர்கள் தரப்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் சங்க தலைவர் ஷாகா அஷ்ரப் மீது சில குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. அப்போது ஷாஹித் அஃப்ரிடி பேசுகையில், “ஷாகா அஷ்ரப் பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத் தலைவராக உள்ளார். ஏதோ கிளப் அணியின் தலைவர் அல்ல. பாகிஸ்தான் கிரிக்கெட் வளர்ச்சிக்கு ஏராளமான பணிகள் செய்ய வேண்டியுள்ளது.
ஆனால் அதனை விடுத்து, பல்வேறு தொலைக்காட்சிகளுக்கு செல்போன் மூலம் அழைத்து யாரெல்லாம் தன்னை பற்றி தவறாக பேசுகிறார் என்று விசாரித்து வருவதாக தெரிய வந்துள்ளது. இதுபோன்ற செயல்களை ஷாகா அஷ்ரப் நிறுத்திக் கொள்ள வேண்டும். உங்களை பற்றி மற்றவர்கள் பேசுவதற்கு உங்களின் செயல்பாடுகளே காரணம். உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி விளையாடிக் கொண்டிருக்கும் போது, உங்கள் பணியை ஒழுங்காக செய்யாமல் இருக்கிறீர்கள்” என்று கண்டித்தார்.
அதேபோல் பாபர் அசாம் பகிர்ந்த சில மெசேஜ்களை பகிர்ந்த தொலைக்காட்சிக்கும் கண்டனம் தெரிவித்தார். அதில், நமது அணியையும், வீரர்களையும் நாம் அசிங்கப்படுத்த கூடாது. நண்பராக உங்களுடன் பேசிய நமது கேப்டனின் மெசேஜ்களை எப்படி உங்களால் மீடியாவில் ஒளிபரப்ப முடிந்தது என்று கொந்தளித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now