
ZIM vs AFG 2nd T20I Dream11 Prediction: ஆஃப்கானிஸ்தான் அணியானது தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணியானது வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கண்க்கில் டி20 தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதையடுத்து ஜிம்பாப்வே மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை ஹராரேவில் உள்ள ஸ்போர்ட்ஸ் கிளப் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஜிம்பாப்வே அணி ஏற்கெனவே முதல் போட்டியில் வெற்ற்பெற்ற உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. தேசமயம் தொட்ர் வெற்றிகளைக் குவித்து வந்த ஆஃப்கானிஸ்தான் அணியானது தற்போது தோல்வியைத் தழுவியதன் காரணமாக இப்போட்டியில் வெற்றிபெற்று அதற்கு பதிலடியைக் கொடுக்கும் முனைப்புடன் விளையாடவுள்ளது. இதனால் இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
ZIM vs AFG 2nd T20I: Match Details