
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரை ஜிம்பாப்வே அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இதையடுத்து நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியிலும் ஜிம்பாப்வே அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ஹராரேவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி முதலில் ஆடிய வங்கதேச அணிக்கு கேப்டன் தமிம் இக்பால் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். ஆனால் மறுமுனையிலிருந்த அனமுல் ஹக் 20 ரன்களில் நடையைக் கட்ட, தமிம் இக்பால் தனது அரைசதத்தைப் பதிவுசெய்த கையோடு விக்கெட்டை இழந்தார். அதன்பின் வந்த நஜ்முல் ஹொசைன் 38 ரன்களிலும், முஷ்பிக்கூர் ரஹிம் 25 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.