
ZIM vs BAN: Zimbabwe win by 23 runs and keep the series alive (Image Source: Google)
ஜிம்பாப்வே - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
இதில் தொடக்கம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மாதேவெர் அரைசதமடித்து அசத்தினார். அவருடன் இணைந்து விளையாடிய ரியான் பர்லும் தனது பங்கிற்கு 34 ரன்களை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி 6 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்களைச் சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் ஷொரிஃபுல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.