
ZIM vs IND Probable Playing XI! (Image Source: Google)
இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் 18ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பந்த் உள்ளிட்ட வீரர்களுக்கு ஒய்வு வழங்கப்பட்டு இருக்கிறது
முழு உடல் தகுதியை பெற்ற கேஎல் ராகுல் இந்திய அணிக்கு கேப்டனாக திரும்புகிறார். பல இளம் வீரர்களுக்கு இந்த தொடர் வாய்ப்பு வழங்கி உள்ளதால் இந்திய ரசிகர்களிடையே, இந்த தொடர் கவனத்தை ஈர்த்துள்ளது.
தொடக்க வீரராக அனுபவ வீரர் ஷிகர் தவான் களமிறங்குவார். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தவானுக்கு ஜோடியாக சுப்மான் கில் விளையாடினார். ஆனால் இந்த தொடரில் கேஎல் ராகுல் அணிக்கு திரும்பியதால், அவர் தொடக்க வீரராக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இஷான் கிஷான் 3ஆவது வரிசையில் விளையாடலாம்.