Advertisement

ZIM vs IRE, 2nd ODI: தொஹானி, டெக்டர் அபாரம்; ஜிம்பாப்வேவுக்கு 294 டார்கெட்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 294 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Advertisement
ZIM vs IRE, 2nd ODI: Ireland come back strongly against Zimbabwe!
ZIM vs IRE, 2nd ODI: Ireland come back strongly against Zimbabwe! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 21, 2023 • 04:46 PM

ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்துவரும் அயர்லாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை ஜிம்பாப்வே அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Bharathi Kannan
By Bharathi Kannan
January 21, 2023 • 04:46 PM

இதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி அபார வெற்றிபெற்று அசத்தியது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ஹராரேவில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

Trending

அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு பால் ஸ்டிர்லிங் - ஸ்டீபன் தொஹானி இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்டிர்லிங் 45 ரன்களில் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரரான தொஹானி அரைசதம் கடந்தார். 

இதையடுத்து களமிறங்கிய கம்மின்ஸ் 6 ரன்களில் விக்கெட்டை இழக்க, சதத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த தொஹானி 84 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஹேரி டெக்டர் இப்போட்டியிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து அசத்தினார். பின் அவரும் 75 ரன்களில் விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.

இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 294 ரன்காளை சேர்த்தது. ஜிம்பாப்வே அணி தரப்பில் டெண்டாய் சதாரா 3 விக்கெட்டுகளையும், பிராட் எவன்ஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement