
அயர்லாந்து அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் இன்று இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச முடியவுசெய்ய, அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர்கள் மருமணி ரன்கள் ஏதுமின்றியும், மதவெரே 9 ரன்களுக்கும், கேப்டன் சீன் வில்லியம்ஸ் 17 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். பின்னர் இணைந்த கமுன்ஹுகம்வே- ரியான் பார்ல் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
பின் 39 ரன்களில் கமுன்ஹுகம்வே விக்கெட்டை இழக்க, மறுபக்கம் களமிறங்கிய கிளைவ் மடாண்டே அதிரடியாக விளையாடி 44 ரன்களையும், ரியான் பார்ல் 38 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி 5 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களைச் சேர்த்தது. அயர்லாந்து அணி தரப்பில் மார்க் அதிர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.