
ZIM vs IRE, 3rd T20I: Zimbabwe restrict Ireland to a modest total! (Image Source: Google)
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்துவரும் அயர்லாந்து அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்த இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்துள்ளன.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று ஹராரேவில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணியின் டாப் ஆர்டர் பேட்டர்கள் கேப்டன் பால்பிர்னி 9, ரோஸ் அதிர் 1, ஸ்டீபன் தொஹனி 2 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் களமிறங்கிய ஹாரி டெக்டர் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.