
ZIM vs IRE 2nd ODI Dream11 Prediction: அயர்லாந்து அணி தற்போது ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் தற்போது இரு அணிகளுக்கும் இடையே ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து தொடரில் முன்னிலைப் பெற்றது.
இந்நிலையில் ஜிம்பாப்வே - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை ஹராரேவில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் அயர்லாந்து அணி ஏற்கெனவே முதல் போட்டியில் தோல்வியடைந்துள்ள நிலையில், இப்போட்டியில் அதற்கான பதிலடியைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் ஜிம்பாப்வே அணி முதல் போட்டியில் வென்ற உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
ZIM vs IRE 2nd ODI: Match Details
- மோதும் அணிகள்- ஜிம்பாப்வே vs அயர்லாந்து
- இடம் - ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானம், ஹராரே
- நேரம் - பிப்ரவரி 16, மதியம் 1 மணி (இந்திய நேரப்படி)