
ஜிம்பாப்வே vs அயர்லாந்து, இரண்டாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Cricketnmore)
Zimbabwe vs Ireland 2nd T20I Dream11 Prediction: அயர்லாந்து அணி தற்போது ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் தற்போது இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது இன்று தொடங்கியது.
அதன்படி இன்று நடைபெற இருந்த ஜிம்பாப்வே - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியானது தொடர் மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை ஹராரேவில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரில் முன்னிலைப் பெறும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தில் அதிகரித்துள்ளது.
ZIM vs IRE 2nd T20I: Match Details
- மோதும் அணிகள்- ஜிம்பாப்வே vs அயர்லாந்து
- இடம் - ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானம், ஹராரே
- நேரம் - பிப்ரவரி 23, மாலை 5 மணி (இந்திய நேரப்படி)