
Zimbabwe vs New Zealand Test Series 2025: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து கிளென் பிலீப்ஸ் விலகியதை அடுத்து, அவருக்கு பதிலாக மைக்கேல் பிரேஸ்வெல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அந்தவகையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது எதிர்வரும் ஜூலை 30ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 30ஆம் தேதியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 07ஆம் தேதியும் புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த தொடருக்கான நியூசிலாந்து டெஸ்ட் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. டாம் லேதம் தலைமையிலான இந்த டெஸ்ட் அணியில் அறிமுக வீரர் மேத்யூ ஃபிஷருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன்னிற்கு இந்த தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மைக்கேல் பிரேஸ்வெல்லும் தனிப்பட்ட காரணங்களால் இத்தொடரில் விளையாடவிலலை என்று அறிவிக்கப்பட்டிருந்தது.