Advertisement

ஜிம்பாப்வே vs நியூசிலாந்து, இரண்டாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

ஜிம்பாப்வே - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை புலவாயோவில் உள்ள குயின்ஸ் போட்ர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது

Advertisement
ஜிம்பாப்வே vs நியூசிலாந்து, இரண்டாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே vs நியூசிலாந்து, இரண்டாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Cricketnmore)
Tamil Editorial
By Tamil Editorial
Aug 06, 2025 • 07:19 PM

ZIM vs NZ 2nd TestDream11 Prediction: நியூசிலாந்து அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளைடாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. 

Tamil Editorial
By Tamil Editorial
August 06, 2025 • 07:19 PM

இந்நிலையில் ஜிம்பாப்வே - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை புலவாயோவில் உள்ள குயின்ஸ் போட்ர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே நியூசிலாந்து அணி முதல் போட்டியை வென்ற உத்வேகத்துடன் இந்த போட்டியை எதிர்கொள்கிறது. மறுபக்கம் ஜிம்பாப்வே அணி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் விதமாக விளையாடும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.  

ZIM vs NZ: Match Details

  • மோதும் அணிகள் - ஜிம்பாப்வே vs நியூசிலாந்து
  • இடம் -  குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப், புலவாயோ
  • நேரம்- ஆகாஸ்ட் 7, மதியம் 1.30 மணி (இந்திய நேரப்படி)

ZIM vs NZ: Live Streaming Details

ஜிம்பாப்வே - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடரை இந்திய ரசிகர்கள் ஃபேன்கோட் செயலியில் நேரலையில் காண முடியும்.

ZIM vs NZ: Head-to-Head in Tests

  • மொத்தம் - 18
  • நியூசிலாந்து - 12
  • ஜிம்பாப்வே - 00
  • முடிவில்லை- 06

ZIM vs NZ: Ground Pitch Report

நியூசிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இந்த போட்டி குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை மொத்தம் 31 சர்வதேச டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், முதலில் பேட்டிங் செய்த அணி 9 முறையும், முதலில் பந்துவீசிய அணி 12 முறையும் வெற்றிபெற்றுள்ளன. இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி 324 ரன்களாகவும், நான்காவது இன்னிங்ஸ் சராசரி 182 ரன்களாகவும் உள்ளது. மேலும் இங்கு அதிகபட்சமாக 713 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

ZIM vs NZ: Possible XI

Zimbabwe: பென் கரண், நிக்கோலஸ் வெல்ச், சீன் வில்லியம்ஸ், கிரேக் எர்வின் (கேப்டன்), சிக்கந்தர் ரஸா, பிரையன் பென்னட், தஃபத்ஸ்வா சிகா, நியூமன் நியாம்ஹுரி, பிளெஸிங் முசரபானி, வின்சென்ட் மசெகேசா, வெலிங்டன் மசகட்சா

New Zealand: வில் யங், டெவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, ஹென்றி நிக்கோல்ஸ், டேரில் மிட்செல், மைக்கேல் பிரேஸ்வெல், டாம் பிளண்டெல், மிட்செல் சாண்ட்னர் (கே), மேட் ஹென்றி, ஜேக்கப் டஃபி, ஜாக் ஃபோல்க்ஸ்

ZIM vs NZ: Dream11 Team

  • Wicket-keepers: டெவான் கான்வே, தஃபத்ஸ்வா சிகா
  • Batters: சீன் வில்லியம்ஸ், டேரில் மிட்செல், கிரேய்க் எர்வின், வில் யங் (கேப்டன்)
  • All-rounders: சிகந்தர் ரஸா(துணைக்கேப்டன்), மிட்செல் சான்ட்னர், ரச்சின் ரவீந்திரா
  • Bowler: மேட் ஹென்றி, பிளெசிங் முஸரபானி

ZIM vs NZ 2nd Test Dream11 Prediction, ZIM vs NZ Dream11 Prediction, Today Match ZIM vs NZ, ZIM vs NZ Prediction, ZIM vs NZ Dream11 Team, Fantasy Cricket Tips, ZIM vs NZ Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Zimbabwe vs New Zealand

Also Read: LIVE Cricket Score

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement
வீடு Special Live Cricket Video Sports