Pak vs ZIM: 36 வயதில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான பாகிஸ்தான் வீரர்!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி தரப்பில் 36 வயதான தாபிஷ் கான் அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஹராரே வில் தொடங்கவுள்ளது. முன்னதாக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 116 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்நிலையில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது.
இப்போட்டியில் பாகிஸ்தான் அணி தரப்பில் 36 வயது வேகப்பந்து வீச்சாளர் தாபிஷ் கான் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானின் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் இவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிகிறது. 36 வயதான தாபிஷ் கான் பாகிஸ்தான் உள்ளூர் போட்டிகளில் 598 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now