
Zimbabwe Cricketer Ryan Burl Pleads For Sponsor, Posts Picture Of Ripped Shoe (Image Source: Google)
பாகிஸ்தான் ஆணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வந்தது. இதில் பாகிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
இந்நிலையில் ஜிம்பாப்வே அணியை சேர்ந்த ரியான் பர்ல் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து ரியான் பர்லின் ட்விட்டர் பதிவில், “எங்களுக்கு மட்டும் ஏதேனும் ஸ்பான்சர் கிடைக்க வாய்ப்பு இருந்தால் ஒவ்வொரு தொடர் முடிந்த பிறகும் எங்களது ஷூவுக்கு(காலணி) பசை ஒட்ட வேண்டிய அவசியம் இருக்காது” என பதிவிட்டுள்ளார். அவரது ட்வீட் தற்போது வைரலாகி உள்ளது.