
நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் எந்தெந்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஒரு பிரிவில் இரண்டு அணிகள் மட்டுமே தகுதி பெற முடியும் என்பதால் சிறந்த அணிகள் கூட வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதில் நாளை நடைபெறும் இரு போட்டிகளில் குரூப் 2இல் இடம்பிடித்துள்ள அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. அதன்படி நாளை காலை நடைபெறும் முதல் போட்டியில் ஜிம்பாப்வே - நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதில் நெதர்லாந்து அணி அடுத்தடுத்து 3 தோல்விகளைச் சந்தித்து அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்துள்ள நிலையில், ஜிம்பாப்வே அணி ஒரு வெற்றியைப் பெற்று இன்னும் போட்டியில் நீடித்து வருகிறது. இனிவரும் இரண்டு போட்டிகளிலும் அந்த அணி பிரமாண்ட வெற்றியைப் பதிசெய்யும் வகையில் அந்த அணிக்கும் சிறுது வாய்ப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.