
ஜிம்பாப்வே vs இலங்கை, முதல் டி20 போட்டி- போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்! (Image Source: Cricketnmore)
ZIM vs SL 1st T20I, Cricket Tips: இலங்கை அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த ஒருநாள் தொடரில் இலங்கை அணி இரண்டிலும் வெற்றி பெற்று தொடரை வென்றது.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் நாளை முதல் நடைபெறவுள்ளது. அதன்படி முதல் டி20 போட்டியானது ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே ஒருநாள் தொடரை வென்ற உத்வேகத்துடன் இலங்கை அணி விளையாடவுள்ளது. மறுபக்கம் ஒருநாள் தொடரை இழந்துள்ள ஜிம்பாப்வே அணி டி20 தொடரில் கம்பேக் கொடுக்க முயற்சி செய்யும். இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
ZIM vs SL: Match Details
- மோதும் அணிகள் - ஜிம்பாப்வே vs இலங்கை
- இடம் - ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானம், ஹராரே
- நேரம்- செப்டம்பர், மாலை 5 மணி (இந்திய நேரப்படி)