ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024, சூப்பர் 8: வங்கதேசம் vs ஆஃப்கானிஸ்தான் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Afghanistan vs Bangladesh Dream11 Prediction, T20 World Cup 2024: ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதில் குரூப் 2 பிரிவில் இடம்பிடித்துள்ள இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில், குரூப் 1இல் இருந்த எந்த இரு அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதன்படி, இத்தொடரில் நாளை நடைபெறும் சூப்பர் 8…
Afghanistan vs Bangladesh Dream11 Prediction, T20 World Cup 2024: ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதில் குரூப் 2 பிரிவில் இடம்பிடித்துள்ள இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில், குரூப் 1இல் இருந்த எந்த இரு அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதன்படி, இத்தொடரில் நாளை நடைபெறும் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இருப்பினும் இன்றைய ஆட்டத்தின் முடிவைப் பொறுத்தே இரு அணிகளின் அரையிறுதிச்சுற்று வாய்ப்பானது இருக்கும் என்பதால், இவ்விரு அணிகளும் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளின் முடிவிற்காக காத்திருக்கின்றனர்.