T20 WC 2024: டுவைன் பிராவோவின் சாதனையை முறியடித்த ஆண்ட்ரே ரஸல்!
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீசியது. அதன் படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. இதில் ஷாய் ஹோப் ரன்கள் ஏதுமின்றியும், நிக்கோலஸ் பூரன் ஒரு ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து…
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீசியது. அதன் படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. இதில் ஷாய் ஹோப் ரன்கள் ஏதுமின்றியும், நிக்கோலஸ் பூரன் ஒரு ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். அதன்பின் இணைந்த கைல் மேயர்ஸ் - ரோஸ்டன் சேஸ் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.