ஆஃப்கானிஸ்தான் - நெதர்லாந்து அணிகள் கத்தாரில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன.
இதில் நேற்று முந்தினம் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி தோஹாவில் இன்று நடைபெறுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளார்.
இப்போட்டியிலும் ஆஃப்கானிஸ்தான் அணி வெல்லும் பட்சத்தில் தொடரைக் கைப்பற்றும் என்பதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஆஃப்கானிஸ்தான் : ரஹ்மானுல்லா குர்பாஸ், உஸ்மான் கானி, ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி(கே), நஜிபுல்லா ஜத்ரான், குல்பாதின் நைப், ஷரஃபுதீன் அஷ்ரஃப், ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், யாமின் அஹ்மத்ஸாயி, ஃபரித் அஹ்மத் மாலிக்
நெதர்லாந்து: ஸ்காட் எட்வர்ட்ஸ், மூசா அகமது, கொலின் அக்கர்மேன், பாஸ் டி லீட், பீட்டர் சீலர்(கே), போரிஸ் கோர்லி, சாகிப் சுல்ஃபிகார், பிலிப் போயிஸ்வெயின், பிரெட் கிளாசென், விவியன் கிங்மா, ரியான் க்ளீன்.