ஆஃப்கானிஸ்தான் - நெதர்லாந்து அணிகள் கத்தாரில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன.
இதில் ஆஃப்கானிஸ்தான் அணி ஏற்கெனவே முதலிரு ஒருநாள் போட்டிகளிலும் வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி தொடரை வென்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி தோஹாவில் இன்று நடைபெறுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளார்.
இப்போட்டியிலும் ஆஃப்கானிஸ்தான் அணி வெல்லும் பட்சத்தில் நெதர்லாந்தை ஒயிட் வாஷ் செய்யும் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஆஃப்கானிஸ்தான் : ரஹ்மானுல்லா குர்பாஸ், ரியாஸ் ஹுசேன், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி(கே), நஜிபுல்லா ஜத்ரான், ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், அஸ்மத்துல்லா உமர்சாய், கைஸ் அஹ்மத், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, ஃபரீத் அஹ்மத் மாலிக்
நெதர்லாந்து: ஸ்காட் எட்வர்ட்ஸ், கொலின் அக்கர்மேன், சாகிப் சுல்பிகார், பாஸ் டி லீட், பீட்டர் சீலர்(கே), போரிஸ் கோர்லி, கிளேட்டன் ஃபிலாய்ட், பிலிப் போயிஸ்வெயின், விவியன் கிங்மா, ஆர்யன் தத், பிராண்டன் குளோவர்