அதிக டி20 ரன்கள்: பொல்லார்ட், சோயப் மாலிக்கை பின்னுக்கு தள்ளிய அலெக்ஸ் ஹேல்ஸ்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐஎல்டி20 தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற முதல் குவாலிஃபையர் சுற்று ஆட்டத்தில் துபாய் கேப்பிட்டல்ஸ் மற்றும் டெஸர்ட் வைப்பர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியின் முடிவில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி கடைசி பந்தில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் டெஸர்ட் வைப்பர்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News