இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று, 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று லண்டனிலுள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்துள்ளது.
முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்த சூழலில், இந்த போட்டியில் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணிக்கு பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பில் இங்கிலாந்து ரசிகர்கள் உள்ளனர்.
ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ்(கே), நாதன் லையன், ஜோஷ் ஹேசில்வுட்
இங்கிலாந்து: ஜாக் கிரௌலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ்(கே), ஜானி பேர்ஸ்டோவ், ஸ்டூவர்ட் பிராட், ஒல்லி ராபின்சன், ஜோஷ் டங்கு, ஜேம்ஸ் ஆண்டர்சன்.