ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ளது. சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் இந்தத் தொடர் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில், போட்டியை நடத்தும் இந்தியா உள்பட 8 அணிகள் பிரதான சுற்றுக்கு நேரடியாகத் தகுதிபெற்றுவிட்டன. எஞ்சியிருக்கும் 2 இடங்களுக்கான அணிகள் தகுதிச்சுற்று ஆட்டங்கள் மூலம் முடிவு செய்யப்படவுள்ளன.
ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேவில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்றுகள் முடிந்துள்ள நிலையில் இன்று முதல் சூப்பர் 6 சுற்றுகள் ஆரம்பமாகிறது. அதன்படி இன்று நடைபெறும் சூப்பர் 6 சுற்றின் முதல் போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஓமன் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்துள்ளது.
ஜிம்பாப்வே: ஜாய்லார்ட் கும்பி, கிரேக் எர்வின்(கே), வெஸ்லி மாதேவெரே, சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா, ரியான் பர்ல், வெலிங்டன் மசகட்ஸா, லூக் ஜாங்வே, ரிச்சர்ட் ங்கராவா, டெண்டாய் சதாரா, பிளஸ்ஸிங் முசரபானி.
ஓமன்: காஷ்யப் பிரஜாபதி, ஜதீந்தர் சிங், அகிப் இலியாஸ், ஜீஷன் மக்சூத்(கே), முகமது நதீம், சோயப் கான், அயான் கான், நசீம் குஷி, ஃபயாஸ் பட், கலீமுல்லா, பிலால் கான்.