ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரின் 15ஆவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இதில் இன்று நடைபெறும் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியா: கேஎல் ராகுல், ரோகித் சர்மா(கே), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்.
இலங்கை : பாத்தும் நிசாங்க, குசல் மெண்டிஸ், சரித் அசலங்கா, தனுஷ்க குணதிலக்க, பானுக ராஜபக்ச, தசுன் ஷனக(கே), வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்னே, மஹீஷ் தீக்ஷனா, அசித்த பெர்னாண்டோ, தில்ஷான் மதுஷங்க.