
டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில், குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஃப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஹாங்காங் அணிகளும் இடம்பிடித்துள்ளன. இதனால் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அதன்படி இன்று நடைபெறும், தொடரின் 9ஆவது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம் பிடித்துள்ள ஆஃப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸை வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும் என்பதால், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன்.
வங்கதேசம் பிளேயிங் லெவன்: தன்சித் ஹசன் தமீம், சைஃப் ஹாசன், லிட்டன் தாஸ்(கேப்டன்), தௌஹித் ஹிரிடோய், நசும் அகமது, நூருல் ஹசன், ஜாக்கர் அலி, ஷமிம் ஹொசைன், ரிஷாத் ஹொசைன், முஸ்தஃபிசூர் ரஹ்மான், தஸ்கின் அகமது
ஆஃப்கானிஸ்தான் பிளேயிங் லெவன்: ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், செதிகுல்லா அடல், குல்பதின் நைப், அஸ்மத்துல்லா ஒமர்சாய், முகமது நபி, கரீம் ஜனத், ரஷித் கான் (கேப்டன்), நூர் அகமது, அல்லா கசன்ஃபர், ஃபசல்ஹாக் ஃபரூக்கி