
டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில், குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஃப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஹாங்காங் அணிகளும் இடம்பிடித்துள்ளன. இதனால் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அதன்படி இன்று நடைபெறும், தொடரின் 10ஆவது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸை வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. முன்னதாக இந்திய நேரப்படி 8 மணிக்கு நடைபெற இருந்த நிலையில், பாகிஸ்தானின் தாமதத்தால் ஒரு மணி நேர தாமதமாக தொடங்குகிறது.
பாகிஸ்தான் பிளேயிங் லெவன்: சைம் அயூப், சாஹிப்சாதா ஃபர்ஹான், முகமது ஹாரிஸ், ஃபகர் ஸமான், சல்மான் ஆகா(கேப்டன்), குஷ்தில் ஷா, ஹசன் நவாஸ், முகமது நவாஸ், ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப், அப்ரார் அகமது
ஐக்கிய அரபு அமீரகம் பிளேயிங் லெவன்: அலிஷான் ஷரபு, முஹம்மது வசீம்(கேப்டன்), ஆசிப் கான், முஹம்மது ஜோஹைப், ஹர்ஷித் கவுசிக், ராகுல் சோப்ரா, துருவ் பராஷர், ஹைதர் அலி, முஹம்மது ரோஹித் கான், சிம்ரன்ஜீத் சிங், ஜுனைத் சித்திக்