
டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறிய நிலையில், இலங்கை அணி சூப்பர் 4 சுற்றுடன் வெளியேறியுள்ளது. அதேசமயம் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் மற்றொரு அணிக்கான போட்டியில் பாகிஸ்தான் - வங்கதேச அணிகள் உள்ளன.
அதன்படி இன்று நடைபெறும் 5ஆவது சூப்பர் 4 ஆட்டத்தில் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இன்றைய போட்டிக்கான வங்கதேச அணியில் நூருல் ஹசன், தஸ்கின் அஹ்மத், மஹெதி ஹசன் ஆகியோர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வங்கதேச பிளேயிங் லெவன்: சைஃப் ஹாசன், பர்வேஸ் ஹொசைன் எமன், தவ்ஹித் ஹிரிடோய், ஷமிம் ஹொசைன், ஜேக்கர் அலி(கேப்டன்), நூருல் ஹசன், மஹேதி ஹசன், ரிஷாத் ஹொசைன், தஸ்கின் அகமது, தன்சிம் ஹசன் சாகிப், முஸ்தஃபிசூர் ரஹ்மான்
பாகிஸ்தான் பிளேயிங் லெவன்: சாஹிப்சாதா ஃபர்ஹான், ஃபகார் ஸமான், சைம் அயூப், சல்மான் ஆகா(கேப்டன்), ஹுசைன் தலாத், முகமது ஹாரிஸ், முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரஃப், ஷஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவூப், அப்ரார் அகமது.