
டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேச அணிகள் முன்னேறின. இதில் இன்று நடைபெறும் சூப்பர் 4 போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இரு அணிகளும் தங்களுடைய சூப்பர் 4 ஆட்டத்தில் தோல்வியைத் தழுவிய கையோடு இந்த போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இலங்கை அணி பிளேயிங் லெவன்: பாதும் நிஷங்க, குசால் மெண்டிஸ், குசல் பெரேரா, சரித் அசலங்கா(கேப்டன்), தசுன் ஷனக, கமிந்து மெண்டிஸ், சமிகா கருணரத்னே, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷனா, துஷ்மந்த சமீர, நுவான் துஷார
பாகிஸ்தான் பிளேயிங் லெவன்: சைம் அயூப், சாஹிப்சாதா ஃபர்ஹான், முகமது ஹாரிஸ், ஃபகார் ஸமான், சல்மான் ஆகா(கேப்டன்), ஹுசைன் தாலத், முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரஃப், ஷஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ராவுஃப், அப்ரார் அகமது