
டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் இறுதிப் போட்டி இன்று நடைபெறுகிறது. அதன்படி, இந்த இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக விலகியுள்ளார். இதனால் ரிங்கு சிங் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் ஜஸ்பிரித் பும்ராவும் பிளேயிங் லெவனிற்கு திரும்பியுள்ளார். மறுபக்கம் பாகிஸ்தான அணியில் மாற்றங்கள் ஏதும் செய்யப்படவில்லை.
India Playing XI: ஷுப்மான் கில், அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ரிங்கு, ஷிவம் துபே, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சகரவர்த்தி
Pakistan Playing XI: சைம் அயூப், சாஹிப்சாதா ஃபர்ஹான், முகமது ஹாரிஸ், ஃபகார் ஸமான், சல்மான் ஆகா(கேப்டன்), ஹசன் நவாஸ், முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரஃப், ஷஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ராவுஃப், அப்ரார் அகமது