
டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறிய நிலையில், இலங்கை அணி சூப்பர் 4 சுற்றுடன் வெளியேறியுள்ளது. இந்த நிலையில் இன்று நடைபெறும் கடைசி சூப்பர் 4 போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. மேலும் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் ஷிவம் தூபே, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ரானா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை அணியில் சமிகா கருணரத்னேவுக்கு பதிலாக ஜனித் லியானகே சேர்க்கப்பட்டுள்ளார்.
India Playing XI: ஷுப்மான் கில், அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ரானா, குல்தீப் யாதவ், வருண் சகரவர்த்தி
Sri Lanka Playing XI: சரித் அசலங்கா (கேப்டன்), பதும் நிஷங்க, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, தசுன் ஷனக, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியானகே, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷனா, துஷ்மந்த சமீர, நுவான் துஷார