இங்கிலாந்து அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றிபெற்று அசத்தியது.
இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றால் தொடரை வென்றுவிடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இப்போட்டிகான இரு அணியின் கேப்டன்கள் பாட் கம்மின்ஸ், ஜோஸ் பட்லர் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஜோஷ் ஹசில்வுட்டும், இங்கிலாந்தின் கேப்டனாக மொயின் அலியும் செயல்படுகின்றனர்.இதையடுத்து இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
இங்கிலாந்து: ஜேசன் ராய், பிலிப் சால்ட், டேவிட் மாலன், ஜேம்ஸ் வின்ஸ், சாம் பில்லிங்ஸ், மொயின் அலி(கே), கிறிஸ் வோக்ஸ், சாம் குர்ரன், லியாம் டாசன், டேவிட் வில்லி, அடில் ரஷித்
ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுஷாக்னே, அலெக்ஸ் கேரி, மிட்செல் மார்ஷ், மார்கஸ் ஸ்டோனிஸ், ஆஷ்டன் அகர், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்(கே).