NZ vs IND, 1st T20I: மழை காரணமாக முதல் டி20 போட்டி கைவிடப்பட்டது!

India vs New Zealand first T20 abandoned due to rain!
இந்திய அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள், தொடர்களில் விளையாடுகிறது. இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது டி20 போட்டி இந்திய நேரப்படி இன்று மதியம் 12 மணிக்கு வெலிங்டனில் தொடங்க இருந்தது.
ஆனால் அங்கு மழை பெய்ததால் போட்டியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டத்தை உரிய நேரத்தில் தொடங்க முடியவில்லை.
இதனால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டு, மழை நின்ற பிறகு போட்டி மீண்டும் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,தொடர் மழை காரணமாக இப்போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி மவுண்ட் மாங்குனியில் வரும் 20ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News