டி20 உலகக் கோப்பை முடிந்துள்ள நிலையில், அடுத்து இந்திய அணி நியூசிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.நியூசிலாந்துக்கு சென்று, அங்கு இளம் இந்திய அணி தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர், ஒருநாள் தொடர்களில் பங்கேற்க உள்ளது.
இதில் முதல் டி20 போட்டி மழை காரணமாக ரத்தான நிலையில் இன்று இரண்டாவது டி20 போட்டி மவுண்ட் மாங்குனியில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 2024ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில், இந்திய அணியில் தற்போது நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் அதிகளவில் இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது. இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன், உம்ரான் மாலிக் இடம்பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடர்ந்து சொதப்பி வரும் ரிஷப் பந்த், தீபக் ஹூடா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது ரசிகர்களை அதிருப்தியடைய வைத்துள்ளது.
இந்தியா: இஷான் கிஷன், ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா(கே), வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்
நியூசிலாந்து : ஃபின் ஆலன், டெவோன் கான்வே, கேன் வில்லியம்சன்(கே), க்ளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சவுத்தி, ஆடம் மில்னே, லாக்கி பெர்குசன்.