இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான சையித் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு - சிக்கிம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் முதல் போட்டி சத்தீஸ்கரிடம் தோற்ற தமிழக அணி, 2ஆவது போட்டியில் ஒடிஷாவை வீழ்த்தியது. 3ஆவது ஆட்டத்தில் சிக்கிம் அணியை எதிர்கொண்டது.
அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. சிக்கிம் அணி, 20 ஓவர்களில் 79 ரன்கள் மட்டும் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடக்க வீரர் பங்கஜ் குமார் ராவத் மட்டும் அதிகபட்சமாக 22 ரன்கள் எடுத்தார். சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து களமிறங்கிய தமிழ்நாடு அணி 9.4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் நாராயண் கெகதீசன் ஆட்டமிழக்காமல் 58 ரன்கள் எடுத்தார்.