மகளிர் டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலியா பந்துவீச்சு!

Australia Opt To Field First Against Sri Lanka In Women's T20 World Cup
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எட்டாவது சீசன் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இலங்கை அணியை எதிர்கொள்கிறது.
அதன்படி செயிண்ட் ஜார்ஜ் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
இலங்கை மகளிர்: ஹர்ஷிதா சமரவிக்ரம, சாமரி அதபத்து(கே), விஷ்மி குணரத்னே, அனுஷ்கா சஞ்சீவனி, நிலக்ஷி டி சில்வா, மல்ஷா ஷெஹானி, ஓஷாதி ரணசிங்க, அமா காஞ்சனா, சுகந்திகா குமாரி, இனோகா ரணவீர, அச்சினி குலசூரிய
ஆஸ்திரேலியா மகளிர்: அலிசா ஹீலி, பெத் மூனி, மெக் லானிங்(கே), ஆஷ்லீ கார்ட்னர், எலிஸ் பெர்ரி, தஹ்லியா மெக்ராத், கிரேஸ் ஹாரிஸ், ஜார்ஜியா வேர்ஹாம், அலனா கிங், மேகன் ஷட், டார்சி பிரவுன்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News