ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2ஆவது டெஸ்ட் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்துள்ளார்.
இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்டு ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் இணைந்துள்ளார். அதேபோல் ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட், மேத்யூ குன்னமேன் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்திய அணியின் தூண் என்றழைக்கப்படும் சட்டேஷ்வர் புஜாரா தனது 100ஆவது சர்வதேச டெஸ்ட் போட்டியில் களமிறங்குகிறார். நாக்பூர் போட்டியை போலவே இந்த டெஸ்டிலும் இந்தியாவின் அதிரடி தொடருமா? என்று ஆவலோடு எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியா : டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ்(கே), டோட் மர்பி, நாதன் லியோன், மேத்யூ குஹ்னேமன்
இந்தியா : ரோஹித் சர்மா(கே), கேஎல் ராகுல், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ஸ்ரீகர் பாரத், அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, முகமது சிராஜ்.