ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது.
நேற்று முன் தினம் இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இன்று இரண்டாவது டி20 போட்டி நடைபெறுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. மேலும் இன்றைய போட்டிக்கான இரு அணிகளிலும் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.
இந்திய மகளிர்: ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்பிரீத் கவுர் (கே), யஸ்திகா பாட்டியா, ரிச்சா கோஷ், பூஜா வஸ்த்ரகர், தீப்தி சர்மா, ஷிகா பாண்டே, ராஜேஸ்வரி கெய்க்வாட், ரேணுகா சிங்.
ஆஸ்திரேலியா மகளிர்: அலிசா ஹீலி, பெத் மூனி, மெக் லானிங் (கே), ஆஷ்லே கார்ட்னர், எல்லிஸ் பெர்ரி, தஹ்லியா மெக்ராத், நிக்கோலா கேரி, சோஃபி மோலினக்ஸ், ஜார்ஜியா வாரேஹாம், ஹன்னா டார்லிங்டன், டெய்லா விளெமின்க்.