ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 55ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 170 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற இக்கட்டான சூழலில் களமிறங்குகிறது.
இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. இன்றைய போட்டிக்கான ஹைதராபாத் அணியில் கேன் வில்லியம்சன், புவனேஷ்வர் குமார் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர்.
இதனால் ஹைதராபாத் அணியின் கேப்டனாக மனீஷ் பாண்டே செயல்படுகிறார். மேலும் முகமது நபி இன்றைய போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் மும்பை இந்தியன்ஸ் அணியில் பியூஷ் சாவ்லா விளையாடுகிறார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: ஜேசன் ராய், அபிஷேக் சர்மா, மணீஷ் பாண்டே (கே), பிரியம் கார்க், அப்துல் சமத், விருத்திமான் சாஹா, ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், முகமது நபி, உம்ரான் மாலிக், சித்தார்த் கவுல்.
மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா (கே), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, கீரான் பொல்லார்ட், குர்னால் பாண்டியா, ஜேம்ஸ் நீஷம், நாதன் கூல்டர்-நைல், ஜஸ்பிரித் பும்ரா, பியூஷ் சாவ்லா, ட்ரெண்ட் போல்ட்.