ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களில் ஒருவர் ஷேன் வார்னா. அவர் இதுவரை 145 டெஸ்ட், 194 ஒருநாள் போட்டிகளில் விளையாடி ஆயிரத்திற்கும் அதிகமான விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
இந்நிலையில் தற்போது 52 வயதாகும் ஷேன் வார்னே, மாரடைப்பால் இன்று காலமானார். இதனை ஆஸ்திரேலிய ஊடகங்கள் உறுதிசெய்துள்ளன.
டெஸ்ட் கிரிக்கெட்டில் முத்தையா முரளிதரனுக்கு (800) அடுத்தபடியாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் ஷேன் வார்னே (708) ஆவார்.
சுழற்பந்துவீச்சாளரான ஷேன் வார்னே, அவர் ஆடிய காலத்தில் சச்சின் டெண்டுல்கர், பிரயன் லாரா, ஜெயசூரியா, அசாருதீன், ராகுல் டிராவிட், ஜாக் காலிஸ் உள்ளிட்ட பல சிறந்த பேட்ஸ்மேன்களை தனது மாயாஜால சுழலால் அலறவிட்டவர்.
சர்வதேச கிரிக்கெட்டில் ஆல்டைம் சிறந்த வீரர்களில் ஒருவரான ஷேன் வார்னே, கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர், வர்ணனையாளராக இருந்துவந்த நிலையில், தாய்லாந்தில் இன்று திடீர் மாரடைப்பால் காலமடைந்தது. அவரது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.